" வளைந்து கொடுக்கும் நாணலுக்குத் தான் வாழ்வு காலம் அதிகம்.
நீண்டு வளரும் முருங்கைமரக் கிளைகளுக்கு அல்ல", என்று.
கவிதை என்று பிதற்றுகிரானே என நினைக்கிறீர்களா? என் போன்று மிகப் பலர் கவிதை உள்ளம் கொண்டிருந்தும் வெளிப்படுத்த வாய்ப்புகள் இன்றி, வெளிப்படுத்தும் வளர்ப்புகள் இன்றி, வாழ்க்கைப் பாதையில் முட்களையே மிதித்துக் கொண்டு காலத்தின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறோம். எங்களை உற்சாகப் படுத்தும் அளவிலாவது எவ்வகை கவிதையாக வேண்டுமானாலும் (புதுக்கவிதை/மரபுக்கவிதை) எடுத்துக்கொண்டு அடுத்த வரிகளுக்குள் புகுவோமே.
'இன்றைய உலகம் எப்படிப்பட்டது', என்ற வர்ணனை வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் இப்படித்தான் என்று சொல்லும் தைரியம், பக்குவம் அதற்கேற்ற வசதிவாய்ப்புகள் இருப்போர் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். என்னை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. நான் இதைத் தான் படிப்பேன், நான் இப்படித்தான் ..............., நான் இப்படித்தான்................., நான் இப்படித்தான்............... ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.
ஒரு குழந்தை தன் தாயைத்தான் சார்ந்து வாழ முடியும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் சார்ந்து வாழ முடியும்.
ஒரு பக்தன் என்பவன் கடவுளைத் தான் சார்ந்து வாழ முடியும்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சில விதிவிலக்குகளைப் பற்றி கவலை வேண்டாம். இயற்கையின் நியதி என்று ஒன்று உண்டு. இந்த தத்துவம் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று முறை இருக்கிறது. எனவே, வாழ்வில் வளைந்து கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கிறார்களே தவிர வீண் போனதில்லை.
ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் வளைந்து கொடுக்கிறான் என்றால் இங்கே பணிவைக் குறிக்கிறது. வேறு வகையில் பொருள் கொள்ளாதீர்கள். அப்போதுதான் அம்மாணவன் தன் ஆசிரியரிடம் நிறைய தகவல்கள், அதாவது கல்வி மற்றும் நடைமுறை உலகம் சார்ந்தவைகளை கற்றுக்கொள்ள முடியும்.
ஒரு மனைவி/கணவன் தன் கணவன்/மனைவிக்கு வளைந்து கொடுக்கும் போதுதான் குடும்ப வாழ்வு இனிக்கிறது. அதற்காக அளவுகளை மீறிப்போக வேண்டிய அவசியமில்லை.
எனவே, வளைந்து கொடுங்கள் நாணலாக! எந்த துன்பமும் உங்களை துன்பப் படுத்தாது.
No comments:
Post a Comment