இணையத்தில் இலவசமாக கிடைக்கக் கூடிய இ-மெயில் முகவரிகளையே நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். இந்த இ-மெயில்கள் மூலமாக உலகின் எந்த மூலைக்கும் எழுத்து வடிவிலான செய்திகள், படங்கள், நகல்கள் அனைத்தும் பல்வேறு நோக்கங்களுக்காக அனுப்புகிறோம்/பெறுகிறோம். பெரும்பான்மை இ-மெயில் சர்வர்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று சொன்னாலும், Gmail, Yahoo, Hotmail ஆகிய நிறுவனத்தார் நமக்கென்று உள்ள இ-மெயில் முகவரிக்குள்ளாக எழுத்து வடிவத்திலும், படங்கள் வடிவத்திலும் ஹைப்பர் லிங்க் என்று சொல்லக் கூடிய இணைப்புகள் மூலமாக விளம்பரங்களை வைத்துவிடுகின்றனர். நமக்கு இ-மெயில் உபயோகத்தை இலவசமாகத் தருகிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், கணக்கிட முடியாத அளவில் விளம்பரங்களின் மூலமாக சம்பாதிக்கின்றனர் என்பதே உண்மை. இது ஒரு வியாபார உத்தியே.
அதே வேளை, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் சந்தாவாகக் கட்டினால் எவ்வித வியாபார விளம்பரங்களும் இல்லாத, நம் கணினியிலேயே இருக்கும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அல்லது மற்ற இ-மெயில் சாப்ட்வேர்கள் மூலமாக இ-மெயில்கள் பெறும்/அனுப்பும் வசதியையும், மற்ற பல சிறப்புகளும் அடங்கிய இ-மெயில் வசதியை நாம் பெறலாம். அந்த வகையில் சிங்கப்பூர் நிறுவனமான சொஷியல்மேடிக் எனும் நிறுவனம் மற்ற முன்னணி நிறுவனங்களை விட குறைந்த விலையில் இம்மாதிரி இ-மெயில் வசதியைத் தருவதாகச் சொல்கின்றனர்.
விருப்பம் உள்ளோர் பயன்படுத்திப் பாருங்களேன்!
No comments:
Post a Comment