கடந்த 27/04/2010 அன்று செவ்வாய் கிழமை பொத்தோங் பசிர் MRT அருகில் உள்ள சிவதுர்கா ஆலயம் சென்றிருந்தோம். அருள்மிகு சோமநாதர், அருள்மிகு துர்கையம்மன், அருள்மிகு விநாயகர், அருள்மிகு முருகன், அருள்மிகு தட்சணாமூர்த்தி, அருள்மிகு பிரம்மன், அருள்மிகு சுந்தரவள்ளி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நாயன்மார்கள், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களை வணங்கி பிரசாதம் பெற்றுக்கொண்டு கோயிலின் வலப்புறம் உள்ள அன்னதான இடத்தில் வந்து அமர்ந்தோம். அதுவரை தமிழில் பேசிக்கொண்டிருந்த தமிழ் பெண்மணிகள் எங்களைக் கண்டதும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர்.
எனக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சமீபத்தில் ஒலி 96.8 ல் "தமிழர் அனைவரும் தமிழரிடத்தில் தமிழில் பேசுங்களேன்" என்று கேட்டுக் கொண்டதை எவ்வளவு மதிக்கிறார்கள் என்று.
No comments:
Post a Comment