Saturday, March 13, 2010

Welcome

சிங்கப்பூர் தமிழ் என்னும் இந்த புளோக்,   மகா சிவராத்திரி நல்வேளையில் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மிக நீண்ட நாட்களாக சிங்கப்பூர் வாழ் தமிழர் மற்றும் தமிழ்நாட்டை  சேர்ந்த தமிழர்களுக்கென ஒரு இணைய தளம் ஆரம்பிக்கவேண்டுமென எனக்கிருந்த வேண்டுதல் இன்றுவரை நிறைவேறாத நிலையில் குறைந்தபட்சம் இலவசமாக கிடைக்கும் இம்மாதிரி புளோக்குகள் மூலமேனும் என ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பை இன்று பெறுவதில் மகிழ்வடைகிறேன். அந்த வகையில் இந்த புளோக் மூலம் என தனிப்பட்ட கருத்துகள், கவிதைகள், விமர்சனங்கள், பத்திரிகைத் துணுக்குகள், தமிழக மற்றும் உலக அளவில் தமிழர் குறித்த செய்திகளை வெளியிட்டும், இணையதளங்களின் இணைப்புகளை கொடுத்தும் தமிழர் அனைவரும் பயன்பெற என்னால் இயன்ற முயற்சிகளில் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள இத்தளம் ஓர் பாலமாக அமைந்ததை எண்ணி ஆனந்தமே அடைகிறேன்.

வாழ்க தமிழ்! உலகமெலாம் வளர்க தமிழர் பண்பாடு!

1 comment: