வளைந்து கொடுக்கும் நாணலுக்குத்தான்
வாழ்வு காலம் அதிகம் "
" வெட்டுண்ட மரங்கள்கூட வேர் கொண்டு
துளிர்க்கும் காலம்...
வேர் கொண்ட மரம் ஏன் வேதனையில்
சாய வேண்டும்? "
'' சூடு பட்ட செங்கல் தான் உறுதியான
வீடு கட்ட உதவுகிறது.
தடுக்கி விழும் குழந்தைதான்
எழுந்து நடந்து செல்கிறது.
அடிபட்ட தங்கம் தான்
காதணியாய், மோதிரமாய்
உருவெடுத்து மின்னுகிறது அல்லவா? "
ஆகவே, நண்பர்களே, வாழ்வில் சில நேரங்களில் நீங்கள் சந்திக்கும் வாழ்வியல் சிரமங்கள் உங்கள் காலம் முழுமைக்கும் நீடிக்கும் என்று முடிவு செய்து விடாதீர்கள். எத்துணை சிரமங்களை சந்திக்கிறோமோ அவ்வளவும் நமக்கு புதிய சக்தியை தரும், புதிய பாடத்தையும் கற்றுத் தரும். பாடம் கற்றுக்கொண்டுவிட்டோம் எனில் எதையும் சாதித்துவிடலாம். நம்பிக்கை கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment