சிங்கப்பூரில் அரசால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பயன் தரக் கூடியவையே. அந்த வகையில் அரசாங்கம் பொதுமக்கள் கூடும் இடங்களில், பேருந்து நிறுத்தங்களில், கழிவறைகளில் புகைப் பிடிக்கக் கூடாது என்று நீண்ட நாட்களுக்கும் முன்பாகவே அறிவித்திருக்கிறது. என்றாலும், மிகப் பலர் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதே என் கருத்து. அவ்வப்போது அதிகாரிகளும் இவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். புகைப் பிடிக்கும் வழக்கத்தை அவ்வளவு எளிதில் விடமுடியாது என்றாலும் அதற்கென்றுள்ள இடங்களில் புகைப்பிடிக்கலாமே. என்ன ஒரு கொடுமை என்றால் விரும்பி புகைப்பிடிப்பவர் அதற்கென்றுள்ள உடலியல் சிரமங்களை அனுபவிப்பது மட்டுமில்லாமல் ஒரு பாவமும் செய்யாத அருகாமையில் நிற்பவர்கள் இந்த புகையை சுவாசித்து அவர்களும் கொடுமையை அனுபவிக்க வேண்டியுள்ளது. அன்புக்குரியவர்களே! புரிந்துகொள்ளுங்கள். ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் செலுத்தி புகைப்பிடிப்பதா என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
* பொது இடங்களில் எச்சில் துப்பினாலும், குப்பை கொட்டினாலும் அபராதமே! சிந்தியுங்கள்! வீண் செலவான அபராதத்தை தவிர்த்திடுங்கள்!
No comments:
Post a Comment