உங்கள் டெஸ்க்டாப் / லேப்டாப் கணினியில் நீங்கள் புதியதாய் வாங்கி பயன்படுத்தும்போது உள்ள செயல்படும் வேகம் நாட்கள் ஆனபின் குறைவாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் RAM போதுமான அளவில் இருந்தாலும், அதாவது, 512 MB / 1 GB என்றிருந்தாலும் வேகம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. காரணம் என்ன என்று கேட்டால் நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்தும் போது தற்காலிகமாக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செயயப்பட்ட ஃபைல்கள் உங்கள் ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது இம்மாதிரியான ஃபைல்கள் கணினியின் வேகத்தைக் குறைக்கும். வேலை அதிகம், ஒய்வு நேரம் குறைவு என்று இருப்பவர்கள் இந்த ஃபைல்களை நீக்குவது எப்படி என்று மூளையைக் கசக்க வேண்டியது இல்லை.
உங்கள் கணினியின் செயல்படும் வேகத்தை கூட்டவும், ஹார்டு டிஸ்கின் வேகத்தைக் கூட்டவும், மற்றும் பல கணினி மேம்பாடுகள் மிக எளிதாகச் செய்திடவும் மென்பொருட்கள் உள்ளன. அதில் Boost Speed எனும் சாப்ட்வேர் மிக அருமையாகச் செயல்படுகிறது.
சாப்ட்வேர் பயன்படுத்தித் தான் பார்ப்போமே என நினைப்போர் இந்த இணைப்பை கிளிக் செய்யங்கள்.
No comments:
Post a Comment