இன்று மே, 09 சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உட்பட பெரும்பான்மை நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!" என்றார்கள். அதிலும், அன்னையராய் இருப்பதற்கோ ஆயிரம் மாதவம் செய்திருக்க வேண்டும். இந்த உலகை வாழ்விக்கும் தெய்வப் பிறவிகள். இறைவன் தந்த அருட்கொடைகள். இறைவன் இருக்கிறானா, இருக்கிறானா என்று ஓலமிடும் மனிதப்பிறவிகளுக்கு இதோ! நான் இந்த உருவில் இருக்கிறேன், உன் தாய் வடிவில் இருக்கிறேன், உன் தாயாக இருக்கிறேன் என்றுதான் இறைவன் சொல்லுவான். தாயுண்டு எனில் எல்லாம் உண்டு, தாய் இல்லையெனில் எவனும் இல்லை. அந்த வகையில், எந்த நாட்களை வேண்டுமானாலும் கொண்டாடாமல் இருக்கலாம். அன்னையர் தினம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும், அன்னையராய் உருவெடுக்கும் அன்புத் தெய்வங்கள் போற்றப்பட வேண்டும்.
இன்று பேஸ்புக்கின் நண்பர்கள் பகுதியில் நண்பர் ஒருவர் சில படங்களை வெளியிட்டிருந்தார். நானும், என் பங்கிற்கு, அப்படங்களை இங்கு வெளியிட்டு மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment